This WordPress.com site is the bee's knees

DONT’s on shivaratri day

sathvishayam

லிங்கோத்பவ காலம் என்னும் மகாசிவராத்திரி தரிசனம் …13-2-2018

சிவராத்திரி பற்றி இந்த முக நூலில் பலதரப்பட்ட தகவல்கள் வந்தபடி/பதிந்தபடி இருக்கிறது ,
மேலும் மகாசிவராத்திரிவிழா என்ற விளம்பர அட்டைகள் பலஇடம்களில் காண்கிறேன் …..
சிவராத்திரி பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது ..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கபட்டு கொண்டுஇருந்தது
மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள் .

மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு
பக்தர்களுக்கு உணவு அளிப்பது அடியார்கள் சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை
கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரிய வில்லை ..

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதும் நாம் கடைபிடிக்க காரணம் ஏன் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உணவும் உறக்கமும் ஆன்மோவோட தொடர்பு கொள்ளும் நிலையை உடையது எனலாம்.இதையே நமது நூல்கள் அன்னதானத்தையும் பற்றியும் நல்ல உறக்கத்தில் நம் ஆன்மா இறைநிலையை தொடர்பு கொள்வதையும் தெரிவிக்கிறது .
பசிக்கும் பொழுது உணவை தவிர்த்து ஒரு செயலை நாம் செய்ய முற்பட்டால் நம் உடலும் மனமும் ஒத்துழைக்காது
ஆனால் சித்தத்தில் மனதை அமைத்தோமானால் பசி ஏற்படாது.
இவ்வகையாக சித்தர்களும் அடியார்களும் மனதை அமைத்து விடுவார்(அன்னமயகோசத்தில் இருந்து பிராணமயகோசம்)

சாதாரண பக்தர்களான நாம்…

View original post 394 more words

Advertisements

sathvishayam

குருஷேத்திரம்..

பதினேழாம் நாள் போர் முடித்த இரவு..

தனது பாசறைகளைப் பார்வையிட்டவாறே, நாளைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்த தருமனும், பீமனும், சற்று தொலைவில் தெரிந்த கிருஷ்ணரின் கூடாரத்தில் விளக்கெரிவது கண்டு வியப்புற்றனர். எப்போதும், எல்லோருக்கும் முன்பு, அடுத்த கட்ட போர்நிகழ்வுகளை ஆலோசிக்கும் கிருஷ்ணர், இன்று இதுவரை இதுபற்றி எதுவும் பேசவில்லை என்பதும் ஒருபுறம் கலக்கமாகவே இருந்தது தருமனுக்கு.

உள்ளே வரலாமா ? உத்தரவு கேட்டபின் உள்நுழைந்தனர் இருவரும்.

வாருங்கள்.. என்ற கிருஷ்ணரின் குரலில் என்றும் இருக்கும் உற்சாகம் சற்றுக் குறைந்திருப்பது தெரிந்தது தருமனுக்கு.

நாளைய போர் நிகழ்வு பற்றி கேட்டுச் செல்லலாம் என வந்தோம் கிருஷ்ணா.. என்றான் தருமன்.

நாளை பதினெட்டாம் நாள் போர். இதுவே குருஷேத்திரத்தில் இறுதிநாளாக இருக்கும் என எண்ணுகிறேன் நான்.. என இழுத்தார் கிருஷ்ணர்.

இறுதிநாள்தான். ஐயமே இல்லை. துரியோதனனுக்கும், அவனது மொத்தப் படைக்கும் நாளை இறுதிநாள். பாஞ்சாலியின் சபதம் நிறைவேறப்போகும் நாள்.. பல் கடித்தான் பீமன்.

நாளை நம் படைக்கு யார் தலைமை தாங்கப் போகிறீர்கள் ? கேட்ட கிருஷ்ணரை, வியப்புடன் பார்த்தான் தருமன்.

யாரா ? அதை நீயல்லவா முடிவு செய்து சொல்லவேண்டும்.. என்றான் தருமன்.

அர்ஜுனனின் பங்கு இப்போரில் கர்ணனைக் கொன்றதோடு முடிந்துவிட்டது. நகுலனும், சகாதேவனும் நாளைய போருக்கு சரிவர மாட்டார்கள். அண்ணன் தருமர் செல்லுமளவிற்கு அத்தனை அவசியமும் இல்லை. எனவே, துரியோதனனை அழிக்க, நானே தலைமை ஏற்கலாம் என நினைக்கிறேன் கிருஷ்ணா…

View original post 868 more words

sathvishayam

நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்

‘எனக்கு எதுலயும் மனசு ஒட்டல. நல்ல விஷயத்தை தான் எழுதறோம்ன்னாலும் எதுக்கு எழுதணும்ன்னு தான் தோண்றது. எதுவுமே வேண்டியிருக்கல, சந்நியாசம் வாங்கிண்டு போயிடணும் ன்னு தான் இருக்கு. நிறைய தடவை பெரியவா கிட்ட கேட்டாச்சு. இந்த தடவையாவது பெரியவா அதுக்கு அனுக்கிரகம் பண்ணனும்’.

பெரியவா முகத்தில் தவழ்ந்த புன்னகை சிரிப்பாக மாறியது. ‘நான் இங்கே ஒக்காந்துண்டு மடத்தை பரிபாலனம் பண்றேங்கற பேர்ல ஏதேதோ காலட்சேபம் பண்ணி, வயிறு வளத்துண்டு உருப்படாம இருப்பேனாம். ஆனா நீ என்னடான்னா என்னை விட்டுட்டு ஓடி போயி ஹிமாச்சலத்திலே உக்காந்துண்டு தபஸ் பண்ணி மோட்சத்துக்கு போகணுமாம், தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்.’

நிதானமாக எழுந்த பெரியவா அந்த இடத்தை விட்டு அகன்றார். தீர்மானத்துடன் வந்த மனிதரின் மனத்தில் தாங்க முடியாத ஏமாற்றம்.
‘என்னை ஆங்கில மோகத்தில் வீழ்ந்து விடாமல் சரியான நேரத்தில் தடுத்து ஆட்கொண்ட குருநாதர், எனது ஒவ்வொரு சிறிய பெரிய விஷயத்திலும் என்னை வழி நடத்தி வருபவர், சந்நியாச விஷயத்தில் மட்டும் எனக்கு பிடி கொடுக்காமலேயே பேசி வருகிறாரே’ அவர் மனத்தில் தோன்றியது ஏமாற்றம் மட்டுமல்ல, கோபமும் தான்.

‘எம் மேலே கோபமா’.

ஆம் என்று எப்படி சொல்வது?

எனவே மௌனம் தொடர்ந்தது.

‘எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது, புரிஞ்சுக்க முடியாது உடம்பை பிழியறதுக்கு…

View original post 44 more words

sathvishayam

வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”

(சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”க்ஷேமமா இரு” என்று ஆசிர்வதித்த சம்பவம்)

நன்றி-பால ஹனுமான்.-(இது ஒரு மறுபதிவு)

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு அக்ரஹாரம்.+ வேத பாடசாலையும் அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர்கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள் ஆகியோர் வாழ்ந்தனர்.
கட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்சமுமாக மாணவச் சிறுவர்கள் பலர் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடுவதே அத்தனை அழகு! அது மட்டுமா? அக்ரஹார வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள் நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி ஸ்லோகங்களைப் பாடுவர். இதே போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும் கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.

ஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள்…

View original post 277 more words

sathvishayam

அம்மாங்கறவ நம்மளுக்கு அந்த அனாதைப்பட்டம் கெடைக்காம பரம உபகாரம் பண்ணியிருக்கா……………….

பெரியவாளிடம் ஒருவர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.
” என்ன?” என்பது போல் பெரியவா பார்த்தார்.
” இல்ல….வந்து….எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல……”
பெரியவா எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“… வாஸக்கதவை தொறந்து போட்டுட்டு எங்கியாவது போய்டறா! அப்றம் அங்க இங்க அலஞ்சு தேடி கண்டு பிடிக்க வேண்டியிருக்கு! ஆத்துல வேற யாருமே இல்ல….அதுனால,……….”
“அதுனால?…..”
“அம்மாவ….மடத்துல கொண்டு வந்து விட்டுடலாமா?……”
இழுத்தார்.
“நல்லவேளை….எங்கியாவது கண்காணாத காட்டுல கொண்டு போய் விட்டுடலாமான்னு கேக்காம, அந்த மட்டுல, எங்கிட்ட கொண்டு வந்து விடலாமான்னு கேக்கத் தோணித்தே ஒனக்கு!”
பெரியவா சற்று கடுமையாகவும், வேதனையோடும் கூறினார்.
“பாரு ….தாயார்ங்கறவ தெய்வம்! ‘தாயாருக்கு மேல் தெய்வமில்லே; ஏகாதஸிக்கு மேல் வ்ரதமில்லே’ன்னு பழமொழியே உண்டு. என்ன பண்ணறது? தாயார்கள் பாடு இந்த மாதிரி ஆயிடுத்து!.” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே போய் விட்டார்.
பக்தரோ….”ச்சே! என்ன செஞ்சுட்டேன்! பெரியவாகிட்டயா இப்டி பேசிட்டேன்!”
தவித்துவிட்டார்! அதோடு, தன் தவறை உணர்ந்தும் விட்டார்.
பெரியவா கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.
“பெரியவா க்ஷமிக்கணும். எங்கம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டேன்”
கெஞ்சினார்.
ஶாந்தரூபமான பெரியவா அவரை முன்னிட்டு, நம் எல்லோருக்கும் [முக்யமாக, ‘பெரியவாதான் எல்லாம்! ‘என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களுக்கும்] முக்யமான உபதேஸத்தை அருளினார்.
“வயோதிக காலத்ல பெத்தவாளை காப்பாத்த வேண்டியது பிள்ளேளோட…

View original post 87 more words

sathvishayam

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.

அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.

சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.

இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !*

*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !*

நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.

ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.

எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.

குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.

உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள்.

எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

*எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!*

*பெரிய தொகைதான்,

இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.

இந்தச் செய்தி…

View original post 316 more words

sathvishayam

வலம்புரிச் சங்கு தோன்றிய கதை: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற்பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினான். கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழிகேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால்-சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.

தருமருடைய சங்கு அனந்த விஜயம், அர்ஜுனனுடைய தேவதத்தம், பீமனுடையது மகாசங்கம். நகுலனுடையது சுகோஷம். மகாதேவனுடையது மணி புஷ்பகம். கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும்…

View original post 143 more words

Tag Cloud