This WordPress.com site is the bee's knees

Sage of Kanchi

Thanks to Shri Varagooran mama for this article…Lovely one – I am reading this for the first time….Thanks Kannan for the translation.

Periyava_chandramouliswarar_puja_color

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டபிறகு (பெரியவா) நடந்த சம்பவம்)

ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் நித்யபூஜை,விசேஷ பூஜை,உற்சவம் எல்லாம் ஒழுங்காக நடைபெறவேண்டுமே? அந்தக் காலத்தில் ஸ்ரீமடம் நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம் வரவு-சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான் இருந்தது. ஸ்ரீபுதுப்பெரியவாள் இந்தத் துறையில் கவனம் செலுத்தினார்கள். ‘ஸ்ரீபங்காரு காமாக்ஷி அம்மன் நித்ய பூஜா டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கினார்கள்.அந்த அறக்கட்டளையின் முழு விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி பணித்தார்கள், புதுப் பெரியவாள்.

டிரஸ்ட் நிர்வாகிகளுடன், ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக் கொண்டு நானும் செல்ல வேண்டும் என்று உத்திரவாயிற்று.

மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாம்.

முகாம் இருப்பிடத்தைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றோம்.

பெரியவாள் முன்னிலையில் நின்றோம்.

அணுக்கத் தொண்டர்,சற்று பெரிய குரலில் கூறினார்.

‘தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானிகர் பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்…’

‘முதலில் பிரசாதம் கொடு’-என்று சமிக்ஞை.

ஒரு மூங்கில் தட்டில், ஒரு சாதரா,வாடிப்போன நிர்மால்ய மாலை,புஷ்கலமாகக் குங்குமம்.

குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு, மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள்.

“இன்னும் என்ன இருக்கு..”

‘அம்பாள் பிரசாதமாக, ஒரு சால்வை..’

மகாபெரியவா கண்களில் ஒரு தேஜஸ். நெஞ்சில் ஏதோ நினைவோட்டம்.

“ஸ்தானீகரைக் கூப்பிடு..”

நான் சற்று அருகே சென்றேன். பாதாதிகேசம் அருட்புனலால் ஒரு நீராட்டு.

“நீ….சங்கரசாஸ்திரிகள் புத்திரன் தானே?.

‘ஆமா..’

“என்ன ஒற்றுமை…

View original post 664 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: