Thanks to Smt Saraswathy Thiagarajan for sharing this…
பால் ப்ரண்டன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டது!
நான் மத்ய அர்சு நிர்வாகத்திலுள்ள வானிலை மையத்தில் பொறுப்புள்ள பதவியில் இருந்தேன். 1993 ஆம் வருடம் வரை தீவிர கம்யூனிஸ்டாக கர்மா தத்துவத்தின் மேலும் கடவுள் நம்பிக்கை மேலும் அளவு கடந்த வெறுப்புடன் இருந்து வந்தேன். ப்ராம்மண குலத்தில் பிறந்தும், நித்யானுஷ்டானங்களைச் செய்யாமல் கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாமல் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இழந்து, எனது வீட்டில் நடக்கும் எந்த சமய வழிபாட்டிலும் கலந்து கொள்ளாமல், வெறுத்து வந்தேன்.
இப்படியிரக்கையில் 1993 ஆம் ஆண்டு என் நண்பர்கள் இருவருடன் காஞ்சிபுரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கு கோவில்கள் தவிர எதுவும் பார்க்க இல்லாததால் கோவில்களுக்கு அவர்களுடன் சென்று பிறகு ஸ்ரீமடம் செல்லும் படியாயிற்று. அவரின் சனாதன தர்மத்தில் நம்பிக்கை இல்லாத எனக்கு இப்படி ஓர் வாய்ப்பு!
அந்த வருடம் ஸ்வாமிகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடை பெற்று வந்ததாலும், அங்கு என்ன பணிகள் செய்கிறார்கள் என்பதை அறியவும் ஸ்ரீமடம் சென்றேன்.காலை பதினோரு மணியளவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று ஸ்வாமிகளை தரிசித்துக் கொண்டிருந்தார்கள். நானும் அந்த வரிசையில் நின்று அவரைப் பார்க்கச் சென்றேன் அவரை அருகில் பார்க்க முடியாவிடினும் அவர் பார்வை படும் இடத்தில் இருந்து தரிசிக்க முடிந்தது. அவர் என்னை உற்றுப் பார்ப்பதுபோல் இருந்தது. ஒரு நிமிஷம் தான்! அதற்குப் பிறகு சென்னை திரும்பினோம். வரும் வழியெல்லாம் அவர் பார்வை என்னைத் தொடர்ந்து வந்தது! அவர் என்னைப் பார்த்து”திருவண்ணாமலை போ, ரமணாஸ்ரமம் செல் என்று சொல்வது…
View original post 93 more words
Written by ramakrishnan6002
Leave a comment