Courtesy: Sri.GS.Dattatreyan
இராகவேந்திரரின் இறுதியுரை’
1671-ம் வருஷம், ஷ்ரவண கிருஷ்ண பக்ஷ த்விதீய திதியன்று, மந்திராலயத்தில் தமது ஜீவ ஸமாதியைக் காணக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே ஸ்வாமிகள் உள்ளமுருக்கும் அருளுரை ஒன்றை நிகழ்த்தினார். அதில் அவர் அருளிய முக்கியச் செய்திகள் பின்வருமாறு:
1. நேர்மையான முறையில் வாழாது, நேரிய சிந்தனை வர இயலாது.
2. நலிந்தவர்க்குச் செய்யும் சமூக சேவை, நாராயணனுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்படும். மானவ சேவையே மாதவ சேவை.
3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு எப்போதும் விலகியே நில்லுங்கள்.
4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.
5. இறைவன் மீது பக்தி செலுத்துங்கள். ஆனால், இந்த பக்தி மூட பக்தியாக இருக்கக் கூடாது.
மேற்கூறிய அந்தப் புனித தினத்தில் ஸ்வாமிகள் ஜீவ ஸமாதி எய்தினார். அந்த இடம் பிருந்தாவனம் என அழைக்கப் படுகிறது. ஆண்டுதோறும் இந்த நன்னாளில் பிருந்தாவனத்திலும், உலகெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் பிற பிருந்தாவனங்களிலும் ஸ்ரீ இராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. மந்திராலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்வாமிகளின் அருளை இன்றும் பெறுகின்றனர்.
ஸ்ரீ இராகவேந்திரர் என்னும் சன்னியாசி
இராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மாஞ்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம். துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றைய நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. இராகவேந்திரரின் மடத்தையும்…
View original post 928 more words
Written by ramakrishnan6002
Leave a comment