Archive for December, 2015
அஷ்ட கணபதி மந்திர தீட்சை
சித்தர்கள் மணி,மந்திரம்,ஔஷதம் என்ற மூன்று கலைகளிலும் வல்லவர்கள்.அவர்களின் கூற்றுப்படி, அவர்களின் துறையில் வெற்றி கிட்ட விநாயகர் மந்திரம் ,அன்னை ஸ்ரீ வாலைபரமேஸ்வரி மந்திரம், பஞ்சாட்சர மந்திரம் இவற்றில் சித்தியடைதல் அவசியம்.
முதலில் கணபதி மந்திர சித்தி பற்றிப் பார்க்கலாம்.அகஸ்தியர் தனது வாத சௌமியம் 1200 என்ற சுவடியில் கூறியுள்ளவை.
அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு விதமான கணபதி வழிபாடும் அதன் சித்தி முறைகளையும் வரிசையாகக் கூறிப் பின் இறுதியாக அஷ்ட கணபதிகளும் ஒருங்கே நின்று சிறப்பான முறையில் அருள் செய்யும் அஷ்ட கணபதி மந்திரம் பற்றி கூறுகிறார்.
அஷ்ட கணபதி மந்திரம்:
ஓம் கிலி அங் உங்
இம்மந்திரத்தை அமாவாசை அன்று அல்லது உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து ஜெபிக்கத் துவங்கவும்.
சித்தர்கள் வழியில் பயணிக்க விரும்பும் யாவரும் அசைவ உணவை அறவே தவிர்த்தல் வேண்டும்.
கிழக்கு முகமாய் அமர்ந்து ஜெபிக்கவும்.வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து ஜெபிக்கவும்.
ஸ்படிகம்,அல்லது ருத்ராக்ஷம் மாலை ஜெபத்திற்கு பயன்படுத்தலாம்.
இம்மந்திரத்தை லக்ஷம் உரு ஜெபித்தால் சித்தியாகி விடும்.ஜெபம் செய்து வரும் காலத்தில் கனவில் யானைகள் வந்து உங்களித் துரத்துவது போல் அல்லது உங்களுடன் விளையாடுவது போல் தின்றலாம்.உங்கள் அருகில் உறங்குபவர்களுக்கு இவையான அனுபவம் ஏற்படலாம். இது மந்திரம் சித்தியாகி வருகிறது என்பதைக் குறிக்கும்.நபருக்கு நபர் அனுபவம் மாறலாம்.
லக்ஷம் உரு ஜெபம் செய்து முடித்த பின் தனக்கோ பிறருக்கோ இம்மந்திர சக்தியால் அதிக நன்மையான பல காரியங்களை செய்யலாம்.
இடது உள்ளங்கையில் விபூதி…
View original post 49 more words
மனம் ஒரு குரங்கு போடவேண்டும் ஒரு கடிவாளம.
View original post 1,194 more words
தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.” என்று வள்ளுவர் குறிப்பிடுவது இதற்காகத்தான்.
View original post 195 more words
தில்லை ஆருத்ரா திருநடனம்
தில்லை ஆருத்ரா திருநடனம்
மாதங்களில் சிறந்த மாதமான மார்கழி திங்களில் திருவாதிரை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் முக்கிய விரதம் திருவாதிரை.
திருவாதிரை நட்சத்திரம் பிறப்பற்ற சிவபெருமானின் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தான் மகா முனிவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதா் என்ற முனிவர்களுக்கு ஆருத்தரா நடனம் காட்டி காட்சி தந்ததாக வழங்கப்படுகிறது.
ஒரு தடவை மகாவிஷ்ணு திடீரென ஆதிசேசன் படுக்கையிலிருந்து இறங்கி செல்லும் போது , ஆதிசேசன் மகாவிஷ்ணுவிடம் காரணம் கேட்க, அதற்கு விஷ்ணு பிரான் நான் தில்ைல சிதம்பரத்தில் நடராஜ பெருமானின் ஆருத்ரா நடனம் காண செல்கிறேன் என்று கூற, இதைக் கேட்ட ஆதிசேசனுக்கு இந் நடனத்தை காண விருப்பம் ெகாண்டு அதற்கு
என்ன செய்யவேண்டுமென்று கேட்க, அதற்கு தில்ைல சென்று சிவபெருமான் மேல் பக்தி கொண்டு கடும்தவம் மேற்கொண்டால் இத்தரிசனம் கிடைக்கும் என்றார், அதன்படி ஆதிசேசனும் தில்லை சென்று சிவனாரை நினைந்து கடும்தவம் செய்தார். இத்தருணத்தில் தான் வியாக்கிர பாதார் என்ற புலிக்கால் முனிவரும் நீண்ட நாள் தவம் இருந்தார் இவர்களுக்கும் இந் நாளில் தான் சிவனார் இந்த ஆருத்ரா நடனக்காட்சியை அளித்தார் என்பது வரலாறு.
ஆருத்தரா நடனம் புரிந்த வரலாறு
தாருகா வனத்து முனிவர்கள் யாவரும் சிவனாரை நிந்தித்து பெருவேள்வி ஒன்று நடத்தினர். அப்போது சிவனார் பிச்சாடனர் வேடம் பூண்டு முனிவர்களின் இல்லங்களுக்கு சென்றார், அப்போது முனிவர்களின் மாத்ர்கள் யாவரும் பிச்சாடனர் பின்னால் செல்வது கண்டு…
View original post 153 more words
உத்திரகோசமங்கை தலம்
உத்திரகோசமங்கை தலம்
இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.
6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்
சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.
7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,
பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.
9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது…
View original post 747 more words
நடராசப் பெருமான்
இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் (வடமொழி – நடராசர்) திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
பொருளடக்கம்
• 1 சொல்லிலக்கணம்
o 1.1 கூத்தன்
o 1.2 சபேசன்
o 1.3 அம்பலத்தான்
• 2 தோற்றம்
• 3 தோற்ற விளக்கம்
• 4 ஐந்தொழில்கள்
• 5 சிதம்பரம்
• 6 திருஉத்தரகோசமங்கை
• 7 மதுரை
• 8 CERN ஆய்வகத்தில் நடராசர் சிலை
• 9 உசாத்துணை
• 10 இவற்றையும் பார்க்க
சொல்லிலக்கணம்
நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
கூத்தன்
கூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்வன் என்று பொருள். மேலும் ஞான கூத்தன் என்றும் சிவபெருமான் வழங்கப்படுகிறார்.
சபேசன்
சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு “சபைகளில் ஆடும் ஈசன்” என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை…
View original post 985 more words
How people see?
Courtesy:Sri.B.Shrivathsa
गावो गन्धेन पश्यन्ति वेदै: पश्यन्ति ब्राह्मणा:।
चारै: पश्यन्ति राजान्श्चक्षुर्भ्यामितरे जना: ॥
Cows “see” (recognise /apprehend) through smell*
brahmins through veda**
kings “see” using spies***
Others merely through their two eyes.
* although a cow sees its calf, it makes sure that the calf is its own
after smelling. Same goes for danger (it smells danger quite far off).
** when confronted with an occasion where a brahmin has to know what is
dharma and adharma, he will take recourse to Veda. This is because
पितृदेवमनुष्याणां *वेदश्चक्षुः सनातनम्* (manusmRRti 12.14) which means
that the Veda functions as though it were the eyes of pitRRis, devas and
manuShyas in telling them every moment what to do and what not. i.e. vidhi
and niShedha (just as the eye tells us where to step and where not to).
*** a king cannot be present everywhere in his kingdom and needs to keep a
View original post 6 more words
Thus spake Raghavendra
Courtesy: Sri.GS.Dattatreyan
இராகவேந்திரரின் இறுதியுரை’
1671-ம் வருஷம், ஷ்ரவண கிருஷ்ண பக்ஷ த்விதீய திதியன்று, மந்திராலயத்தில் தமது ஜீவ ஸமாதியைக் காணக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே ஸ்வாமிகள் உள்ளமுருக்கும் அருளுரை ஒன்றை நிகழ்த்தினார். அதில் அவர் அருளிய முக்கியச் செய்திகள் பின்வருமாறு:
1. நேர்மையான முறையில் வாழாது, நேரிய சிந்தனை வர இயலாது.
2. நலிந்தவர்க்குச் செய்யும் சமூக சேவை, நாராயணனுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்படும். மானவ சேவையே மாதவ சேவை.
3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு எப்போதும் விலகியே நில்லுங்கள்.
4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.
5. இறைவன் மீது பக்தி செலுத்துங்கள். ஆனால், இந்த பக்தி மூட பக்தியாக இருக்கக் கூடாது.
மேற்கூறிய அந்தப் புனித தினத்தில் ஸ்வாமிகள் ஜீவ ஸமாதி எய்தினார். அந்த இடம் பிருந்தாவனம் என அழைக்கப் படுகிறது. ஆண்டுதோறும் இந்த நன்னாளில் பிருந்தாவனத்திலும், உலகெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் பிற பிருந்தாவனங்களிலும் ஸ்ரீ இராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. மந்திராலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்வாமிகளின் அருளை இன்றும் பெறுகின்றனர்.
ஸ்ரீ இராகவேந்திரர் என்னும் சன்னியாசி
இராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மாஞ்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம். துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றைய நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. இராகவேந்திரரின் மடத்தையும்…
View original post 928 more words
Recent Comments