This WordPress.com site is the bee's knees

Sage of Kanchi

Thanks to Sri Halasya Sundaram Iyer for FB share… Original source – Sri P.Swaminathan.

Periyava_hand_on_head_rare_bw

தற்போது சென்னை சூளைமேட்டில் வசித்து வருபவர் எஸ்.கல்யாணசுந்தரம். இவர் தந்தையார் பெயர் தி.நா.சுப்ரமணியம். அதாவது திப்பிராஜபுரம் நாராயணசாமி சுப்ரமணியம். சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திப்பிராஜபுரம். சுப்பிரமணியத்தின் தந்தையார் பெயர் நாராயணசாமி.

சுப்ரமணியம் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தனி நபராகவே இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு எத்தனையோ கல்வெட்டுக்களை ஆராய்ந்து தகவல்களைச் சொன்னவர்.

சுப்ரமணியத்தின் கல்வெட்டுப் புலமை பற்றி அறிந்த மஹாபெரியவா இவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தான் தரிசித்த ஆலயங்களைப் பற்றிய பூர்வீகத் தகவல்களை, இவரிடமிருந்து கேட்டுப் பெறுவது மஹாபெரியவாளின் வழக்கம்.

1950-களின் துவக்கத்தில் தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார் சுப்ரமணியம். இவரைச் சந்தித்து கல்வெட்டு குறித்தான சில விஷயங்களை விவாதிக்கவேண்டும் என்று மஹாபெரியவா தீர்மானித்தால் மடத்துச் சிப்பந்திகள் மூலம் கடிதம் எழுதச் சொல்லி வரவழைப்பார். அவசரம் என்றால் யாரையாவது நேரில் அனுப்பித் தகவல் சொல்லுவார்.

பெரும்பாலும் இரவு பதினொரு மணிக்கு மேல்தான் மஹாபெரியவாளும் சுப்ரமணியமும் இது போன்ற விஷயங்களை விவாதிப்பார்கள். சம்பந்தப்பட்ட ஆலயம் குறித்துத் தனக்கு இருக்கும் சந்தேகங்களை இவரிடம் கேட்பார் மஹாபெரியவா. அதற்கான விளக்கங்களை கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆதாரபூர்வமாகச் சொல்வார் சுப்ரமணியம். சில நேரங்களில் இந்த விவாதம் விடிய விடிய நீடிக்கும். மறுநாள் காலை விடிந்த பின் ஒரு சிப்பந்தி வந்து ‘பெரியவா…ஸ்நானத்துக்கு நேரமாச்சு’ என்று சொன்ன…

View original post 1,014 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: