🙏🏼 சர்வம் சிவமயம் 🙏🏼
சைவசித்தாந்தம் – ஒரு வார்த்தையில் விளக்கம்.
சைவம் என்றால் என்ன?
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.
சைவ சமயம் எப்போது தோன்றியது?
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.
யார் சைவர்?
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.
சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.
சமயக் குரவர்கள் யாவர்?
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்
அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்
புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்
திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன. சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.
திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு…
Recent Comments