This WordPress.com site is the bee's knees

மனம்

CHAMARTHI SRINIVAS SHARMA


இருபத்து நான்கு வீடுகள் இருந்த அந்த குடியிருப்புக்கு அருகே இருந்த குளத்தருகே வசித்து வந்த இரண்டு தவளைகள் சந்தித்து கொண்டன.

“இரவில் நாம் போடும் சத்தம் மனிதர்களுக்கு மிகுந்த தொந்தரவாக இருக்கிறது. அது அவர்களது தூக்கத்தை கெடுக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே நாம் இரவில் சத்தம் போடுவதை நிறுத்தி விட வேண்டும்” என்று முதல் தவளை பேசியது.
இரண்டாவது தவளை இந்த கருத்தினை ஏற்க மறுத்தது. “மனிதர்கள் பகல் முழுவதும் போடும் சத்தம் நமக்கு எரிச்சலாகத் தானே இருக்கிறது. நாம் பொறுத்துக் கொள்கிறோம் இல்லையா? அது போல இரவில் அவர்கள் பொறுத்துக் கொள்ளட்டும்” என்று பதிலளித்தது.
அதற்கு முதல் தவளை,”அவர்கள் சத்தம் போடுகிறார்கள் என்றால் நாமும் சத்தம் போட வேண்டுமா? . இந்த விஷயத்தில் நாம் மனிதர்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாமே” என்றது.

இரண்டாவது தவளை ” நீ என்ன சொல்ல வருகிறாய் ?” என்று கேட்டது.

“ஒருவாரம் நாம் இரவில் சத்தம் போடாமல் இருந்து பார்ப்போமே?” என்றது முதல் தவளை
“இரவில் நட்சத்திரங்ளை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் நம்மை அறியாமலே பாடிவிடுவோமே !. எப்படி நாம் பாடாமல் இருக்க முடியும்? ” என இரண்டாவது தவளைத் திருப்பிக் கேட்டது.

“நாம் நட்சத்திரங்களைக் கண்டு மகிழ்ச்சியடையும் போது மனசுக்குள்ளே பாடிக்கொள்வோம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்காவது முயற்சி செய்வோம்” என்றது முதல் தவளை.
மூன்று நாட்களுக்கு தவளைகள் தாங்கள் மகிழ்ச்சியடையும் போது மனசுக்குள்ளே பாடியது.

மூன்று…

View original post 64 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: