This WordPress.com site is the bee's knees

CHAMARTHI SRINIVAS SHARMA

image

பெரியவா சரணம் !!!

பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடுவீடு திரும்பினார். அவருடைய மனைவி”எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன?” என்றாள். “இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்!” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார். மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு! “பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி…

View original post 134 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: