நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில:
ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
திரு அப்துல் கலாம் இதற்கு மிக அழகாக தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லுகிறார்.
‘எனக்கு அப்போது பத்து வயது. ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எனது ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர். எங்கள் எல்லோருக்கும் அவரது வகுப்பு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அவர் பறவை பறக்கும் விதம் பற்றி பாடம் நடத்தினார். ஒரு பறவையின் படத்தை கரும்பலகையின் மேல் வரைந்தார். வால் பகுதி, இறக்கைகள், தலை, உடம்பு என்று ஒவ்வொன்றாக வரைந்து அது எப்படி தன் உடலைத் தூக்கிக்கொண்டு பறக்கிறது; பறக்கும்போது அது எப்படி தன் பறக்கும் திசையை மாற்றுகிறது, தன் உடம்பை இழுத்துக் கொண்டு எப்படிப் பறக்கிறது என்று விளக்கினார். பத்து, இருபது என்று பறவைகள் சேர்ந்து பறப்பதையும் விளக்கினார்.
கடைசியில் ‘புரிந்ததா?’ என்று கேட்டார். நான் எழுந்திருந்து ‘புரியவில்லை, ஐயா’ என்று சொன்னேன். பல மாணவர்கள் புரியவில்லை என்றனர். அதற்கு அவர் கோபப்படவேயில்லை. ‘இன்று மாலை கடற்கரைக்குச் செல்லலாம்’ என்றார். மாலை மொத்த வகுப்பும் கடற்கரையில் இருந்தது. இனிமையான மாலை வேளை. பெருத்த சத்தத்துடன் அலைகள் பாறைகளின் மீது வந்து மோதுவதை நாங்கள் எல்லோரும் ரசித்துக் கொண்டிருந்தோம். கடற்பறவைகள் பத்து, இருபது என்று சேர்ந்து பறப்பதை ஒரு புதிய ஆர்வத்துடன் பார்த்தோம். எங்கள்…
Recent Comments