This WordPress.com site is the bee's knees

sathvishayam

ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
அர்ஜுன சுனாமி

நினைவு தெரிந்த நாள் முதலாக மகா பாரதம் கதைகளை அம்மா முதல் அத்தனை பேரும் வித விதமாக சொல்லி நிறைய கேட்டிருந்தும், நானே படித்தும் எழுதியும் 80வருஷம் ஆன போதிலும் பாரத தாகம் தீரவில்லை. அதில் வரும் வீர புருஷர்கள் தனது கொள்ளுப்பாட்டனார்கள் என்று அறிந்தால் ஜனமேஜயனுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும் பாரதம் கேட்க? என்று சற்று சிந்திப்போம்.

”வைசம்பாயனரே, என் முன்னோர்களின் பெருமையை, அதுவும் அர்ஜுனனின் கம்பீரத்தை, வலிமையை நீங்கள் சொல்லும்போது நான் அங்கே நேரிலே இருப்பது போல் உணர்கிறேன். அப்புறம் என்னவாயிற்று?”

”பீஷ்மன் சொன்னவாறே மூட்டையைக் கட்டிக்கொண்டு துரியோதனன் உடனே ஹஸ்தினாபுரம் நோக்கி திரும்பினான்” என்று ஆரம்பித்தார் முனிவர்.

” இடது பக்கம் அஸ்வத்தாமன், வலது பக்கம் கிருபர் பாதுகாப்பில் நடுவே துரோணர் என்று நாம் அர்ஜுனனின் தாக்குதலை சமாளிக்கவேண்டும். பின் புற தாக்குதலை நான் பார்த்துக் கொள்வேன். கர்ணன் தேரில் பக்க பலமாக அனைவருக்கும் உதவட்டும்” என்று பீஷ்மர் அணி வகுத்தார்.

”ஆஹா, அதோ பசித்த புலியாக, வெகு வேகமாக தேரைச் செலுத்திக் கொண்டு நம்மை எதிர்நோக்கி ஒருவனாகவே அர்ஜுனன் வருகிறான். தயாராகுங்கள் ” என்றார் பீஷ்மர்.

”உத்தரா, நேரே தேரை செலுத்து. துளியும் பயப்படாதே உன்னையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதோ எதிரே இளைஞனாக ரிஷி குமாரன் போல் நிற்கும் மாவீரன்தான்…

View original post 625 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: