*முதல் அம்சம்*
*ஞான சம்ஹிதை*
*புராண வரலாறு*
அதற்கு முன் நைமிசாரண்யம் வனம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
தற்போதைய உத்தராஞ்சல் மாநிலம் சீத்தாபூர் மாவட்டத்தில் லக்னோவில் இருந்து 89 கி மீ தொலைவில் கோமதி ஆற்றக் கரையில் அமைந்துள்ள அழகிய திவ்ய தேசம் நைமிசாரண்யம். இதை நைமிசார் நிம்கார் என்றும் அழைக்கிறார்கள்.
ஒரு முறை முனிவர்கள் பிரம்மாவை அணுகி “ஹே! ப்ரம்மதேவா!அமைதியாக பன்னிரெண்டு ஆண்டுகள் தவமிருந்து மாபெரும் வேள்வி செய்ய ஏற்றதொரு இடத்தை பூலோகத்தில் எங்களுக்கு காண்பித்தருள வேண்டும்” என வேண்டினர்.
அப்போது பிரம்மா ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சக்கர வடிவில் வளைத்து அதனை உருட்டி விட்டு “இந்தச் சக்கரம் எங்கு போய் நிற்கிறதோ அதுவே நீங்கள் விரும்பிய இடம்” என்றார். அந்தச் சக்கரம் நின்ற இடம் தான் இந்த நைமிசாரண்ய வனம். நேமி என்றால் சக்கரம் ஆரண்யம் என்றால் காடு என்றும் பொருள்.
நைமிசாரண்யத்தில் வேள்வியை நிறைவு செய்த முனிவர்கள் வேள்வியின் பலனை மகவிஷ்ணுவுக்கு தர எண்ணினார்கள். அதன் படியே வேள்வி குண்டத்தில் எழுந்தருளிய விஷ்ணுவும் அவிர்பாகம் பெற்றார். இத்தகைய புண்ணிய யாக பூமி தான் நைமிசாரண்யம். எனவே தான் அங்கு பல முனிவர்கள் வசித்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில், இத்தகைய நைமிசாரண்யம் எனும் புண்ணிய வனத்தில் வசிக்கின்ற தவ முனிவர்கள் அனைவரும் கூடினர். அவர்கள் அனைவரும் சேர்ந்து அதிவிநய பக்தியோடு, வியாஸ மகரிஷியின் சிஷ்யரும் நற்குணங்களையுடைய சூத…
View original post 1,189 more words
Written by ramakrishnan6002
Leave a comment