This WordPress.com site is the bee's knees

sathvishayam

ஒரே ஒரு அனுக்ரஹம்!…

அறுபது வயதை தாண்டிய அந்த பக்தர், நித்யம் ஶிவபூஜை பண்ணுபவர். வெளியூர்வாஸியான அவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண, காஞ்சிபுரத்துக்கு வந்து, ஒரு ஹோட்டலில் இறங்கி, ஸ்நானத்தையும் பூஜையையும் முடித்துக்கொண்டு கொண்டு, ஶ்ரீமடத்துக்கு வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்.

" பரமேஶ்வரா….எனக்கு, ஒண்ணே ஒண்ணை மட்டும் அனுக்ரஹம் பண்ணணுன்னு வேண்டிக்கிறேன்…."

பெரியவா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

" எனக்கு…. அனாயாஸ மரணம் கெடைக்கணும்"

மனஸில் அழுத்தித் கொண்டிருந்த மரண பயத்தால், அபயம் வேண்டி, ப்ரார்த்தித்துக் கொண்டார்.

(அனாயாஸ மரணம் என்றால், ரொம்ப நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து, குடும்பத்தில் உள்ளவர்க்கெல்லாம் கஷ்டம் குடுத்து, "போனால் தேவலை" என்று, தான்.. உள்பட எல்லாரும் நினைக்கும்படி படுத்தி, ஒரு வழியாக போய் சேர்வது என்றில்லாமல், நொடியில் லகுவாக சட்டென்று உயிர் போய்விடுவது என்பதாகும்)

"நீ… தெனோமும் பூஜை முடிக்கறச்சே சொல்ற ப்ரார்த்தனை ஸ்லோகமா… இதச் சொல்லு…..

அனாயாஸேன மரணம் வினா தைன்யேன ஜீவனம் !
தேஹி மே க்ருபயா ஶம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!

இத சொல்லிட்டு, த்ரயம்பக மந்த்ரம் சொல்லிண்டிரு…….."

ப்ரஸாதம் குடுத்தார்.

பெரியவா திருவாக்கால், எப்பேர்ப்பட்ட மந்த்ரோபதேஸம்!

[த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத்]

பக்தர் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு காஞ்சியில் அவர் தங்கியிருந்த ரூமுக்கு போய் கதவை திறந்து நாற்காலியில் உட்காரும்வரை பெரியவாளுடைய ஆக்ஞைப்படி ‘அனாயாஸேன மரணம்’ என்ற ப்ரார்த்தனையையும், ம்ருத்யுஞ்ஜய மந்த்ரத்தையும் சொல்லிக்…

View original post 288 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: