காமாக்ஷி சரணங்களை பற்றிக் கொண்டால் நவக்ரஹங்களும் நன்மையே செய்யும்
உகாதி பண்டிகை அன்று (25th மார்ச் 2020) பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாள் (தெலுங்கு மொழியில்) அனுக்ரஹ பாஷணம் செய்தருளிய போது, இரண்டு மூக பஞ்ச சதீ ஸ்லோகங்களுக்கு விரிவாக பொருள் கூறி, அவற்றை ஜபித்து காமாக்ஷி தேவியிடம் வேண்டிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அந்த ஸ்லோகங்களையும், தமிழில் அதன் பொருளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (On the occasion of Ugadi festival Pujyasri Acharya blessed us with a anugraha bhashanam (in Telugu) Where Swamiji gave detailed meaning of 2 slokams from Mooka pancha shathi and advised us to chant them and pray to Kamakshi devi. Sharing the meaning of those slokams in Tamizh below)
அதில் முதல் ஸ்லோகம், ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம்
शम्पालतासवर्णं सम्पादयितुं भवज्वरचिकित्साम् ।
लिम्पामि मनसि किञ्चन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥
ஶம்பாலதாஸவர்ணம் ஸம்பாத3யிதும் ப4வஜ்வரசிகித்ஸாம் |
லிம்பாமி மனஸி கிஞ்சன கம்பாதடரோஹி ஸித்த4பை4ஷஜ்யம் ||
காமாக்ஷி தேவியை ஒரு சித்த மருந்தாக மூக கவி வர்ணிக்கிறார். அந்த ஸ்லோகத்தின் விரிவான பொருளை இங்கே பார்க்கலாம் – பவ ஜ்வரத்தை போக்கும் அருமருந்து
அடுத்த ஸ்லோகம், பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம்.
दधानो भास्वत्ताममृतनिलयो लोहितवपुः
विनम्राणां सौम्य: गुरुरपि कवित्वं च कलयन् ।
गतौ मन्द: गङ्गाधरमहिषि…
View original post 186 more words
Recent Comments