*”இவர் தான் எனக்கு குரு-.- ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா”*
காஞ்சி மஹாப்பெரியவரை தங்கள் குருவாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. வாழும் தெய்வமான அவரை, இன்றும் கூட பலரும் மானசீக குருவாக ஏற்று வருகின்றனர்.
ஆனால், அந்த குரு, தனக்கு குரு என்று யாரைச் சொன்னார் தெரியுமா? தெரிந்தால், மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.
மஹாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பணக்கார பக்தர், அடிக்கடி காஞ்சி மடம் வந்து பெரியவரைத் தரிசித்து செல்வார். ஒருமுறை, அவர் தனது குடும்பத்தாருடன், தான் வாங்கிய புதிய காரில் மடத்திற்கு வந்தார்.
அதுசமயம் ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் அருகிலுள்ள கலவை கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து, இவரும் அங்கு சென்றார்.
கலவையில் பெரியவரைத் தரிசித்த அவர், தன் கார் சாவியை பெரியவரிடம் கொடுத்து, “பெரியவரே! தாங்கள் தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும்,” என்றார்.
பெரியவர் அவரிடம், கலவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, “நீ அங்கு செல். அங்குள்ள மரத்தின் அடியில், ஒரு பெரியவர் தாடி மீசையுடன் படுத்திருப்பார். அவரை உன் புதுக்காரில் அழைத்து வா,” என்று உத்தரவிட்டார்.
பெரியவர் சொன்னபடியே, அவரும் அங்கு சென்று அந்த முதியவரை அழைத்து வந்தார். இருவரும் பெரியவர் முன்னால் அடக்கமாக நின்றனர்.
பெரியவர் பணக்காரரிடம்,
“இவரை யாரென்று உனக்குத் தெரியாது. ஏன் அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாதல்லவா !
இவர் தான் எனக்கு குரு.
நான் துறவுப்பட்டம்…
View original post 90 more words
Written by ramakrishnan6002
Leave a comment