This WordPress.com site is the bee's knees

sathvishayam

மகா பெரியவா அருளிய அமுதத்தில் ஒரேயொரு துளி..!

காஞ்சி மகான எனும் காஞ்சி மகா பெரியவா உபதேசித்த ஒவ்வொரு விஷயமும் நம் செம்மையான வாழ்க்கைக்கு ஆதாரங்கள். இந்த நாளில்… அவர் அருளிய தேனில் இருந்து ஒரு துளி… தெய்வத்தின் குரலில் அவர் உபதேசித்திருப்பதை உள்ளுக்குள் ஏற்றிக் கொள்வோமா?

‘‘ஒரு விஷயத்தை ஆலோசிப்பதில் இன்னொன்று அகப்படுகிறது. சிவன், அம்பாள், மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மி என்று ஸதிபதிகளாக அவர்களின் உயர்வைச் சொல்லிக்கொண்டு போகும்போது, சட்டென்று பிரம்ம பத்னியான சரஸ்வதி விஷயத்தை விட்டுவிட்டோமே என்று நினைவு வந்தது. பிரம்மா விஷயத்துக்குக் குறுக்கே அதைக் கொண்டு வராமல், எடுத்துக்கொண்ட விஷயத்தை நிலைக்குக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு அப்புறம் அதை எடுத்துக்கொள்ள நினைத்தேன்.

சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலைமடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம். அவளைப் பற்றி ஸ்தோத்ரங்கள் மஹான்கள் பண்ணியிருப்பது கம்பர், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக் கிறார்கள், அவற்றை ஓதுகிறோம். (முத்துஸ்வாமி) தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் சுலோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் ஸரஸ்வதிக்கு மட்டும் ஒன்றையும் காணோம்! தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு…

View original post 241 more words

Advertisements

sathvishayam

வலம்புரிச் சங்கு தோன்றிய கதை: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற்பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினான். கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழிகேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால்-சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.

தருமருடைய சங்கு அனந்த விஜயம், அர்ஜுனனுடைய தேவதத்தம், பீமனுடையது மகாசங்கம். நகுலனுடையது சுகோஷம். மகாதேவனுடையது மணி புஷ்பகம். கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும்…

View original post 143 more words

sathvishayam

“முதியவர் வெற்றிலை சீவலுக்காக ஏங்கிக்
கொண்டிருக்கிறார்’ என்ற ரகசியமான உண்மை பெரியவாளுக்கு அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?..

(‘எப்படித் தெரிந்தது?’ நமக்கும் தான் புரியவில்லை!)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த ஒரு முதியவர்
ஸ்ரீமடத்து வாசலில் சோர்வுடன் உட்கார்ந்திருந்தார்.
ஸ்ரீ பெரியவாள் வாசற்பக்கம் எட்டிப் பார்க்கும்போது
அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள்.

பெரியவாள் அருகில் தரிசனத்துக்கு வந்திருந்த யாரோ ஒரு பக்தர் நின்று கொண்டிருந்தார்.

“நீ எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவியோ?”
என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள் பெரியவா.

பக்தருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

“உத்தரவு…” என்றார் குழைந்தபடி.

“நீ போய் எட்டணாவுக்கு வெற்றிலை சீவல் வாங்கிண்டு வந்து,வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர்கிட்டே
கொடு…”- பெரியவா

பக்தர் ஓட்டமாய் ஓடிப் போய் அருகிலிருந்த பெட்டிக்
கடையிலிருந்து வெற்றிலை, சீவல் வாங்கிக் கொண்டு வந்து,”இந்தாங்கோ,தாத்தா” என்று வயோதிகரிடம் நீட்டினார்.

முதியவருக்கு எல்லையில்லாத சந்தோஷம்.
ஒரு ராஜ்யத்தைக் கொடுத்திருந்தால் கூட, அவ்வளவு
சந்தோஷப்பட்டிருக்க மாட்டார் என்று தோன்றியது.

வாயெல்லாம் பல். (மீதமிருந்த பற்கள்)

“மகராஜனா இருக்கணும்…சௌக்கியமா தீர்க்காயுளா
இருக்கணும்…குழந்தை குட்டிகள் நன்றாக இருக்கணும்… காலையிலேர்ந்து வெத்திலை போடாமல் ரொம்பத் தவிச்சிண்டிருந்தேன். எழுந்து போக முடியல்லே…. காசும் இல்லே….நீ மகராஜனா இருக்கணும்” என்று மனதார வாழ்த்தினார்.

பக்தர் உள்ளே சென்று பெரியவாளிடம் உத்தரவு
நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்தார்.

“கிழவர் என்ன சொன்னார்?”-பெரியவா.

“ரொம்ம்ம்ப சந்தோஷப்பட்டார்…நல்ல சமயத்திலே
வாங்கிக்கொடுத்தியேன்னு ஏராளமா ஆசீர்வாதம்
பண்ணினார்…”-பக்தர்.

“மகராஜனா இருன்னாரோ?”—பெரியவா.

“ஆமாம்”

View original post 32 more words

sathvishayam

*சங்கரன்கோவில்– சிவ ஸ்தலம் ஓர் பார்வை*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

இந்த தலத்துக்கு பல பெயர்கள் உண்டு. சங்கரன் கோவிலை பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்றும் அழைப்பார்கள்.

2. சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் ஒன்றாகும் இந்த ஐம்பூத தலங்களில் முதல் தலம் இதுவே ஆகும். இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள். சிவராத்திரியன்று பல அடியார்கள் ஒன்று கூடி ஐந்து பூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள். அவர்கள் நடந்து செல்லும் மற்ற தலங்கள் அருகிலேயே உள்ளது. இதில் தருகாபுரம் நீர்தலமாகவும், தென்மலை காற்றுத்தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் நெருப்புதலமாகவும், தேவதானம் ஆகாயத்தலமாகவும் அழைக்கப்படுகிறது.

3. சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரத்தின் உச்சி தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும்.

4. சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளது. கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர்.

5. சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.

6. இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம்…

View original post 878 more words

sathvishayam

நவராத்திரிலே ஒவ்வொரு கன்னிகையும், ஒவ்வொரு சுமங்கலியும்
சக்தி அம்சம்- (ஸ்ரீ மஹா பெரியவாளின் அருள்வாக்கு)

நவராத்திரிலே ஒவ்வொரு கன்னிகையும், ஒவ்வொரு சுமங்கலியும்
சக்தி அம்சம். அவாளை சுவாசினியா உருவகப்படுத்தி பூஜை செய்யலாம். சிவ-சக்தி வடிவமா தம்பதி பூஜை செய்யறதுக்கு விசேஷம். ஒரே நாளில் ஒன்பது பேருக்கோ, ஒவ்வொரு நாளில் ஒவ்வொருத்தருக்கோ, எண்ணெய் தேய்த்து நீராடக் சொல்லணும். நிறைய மஞ்சள், மருதாணி, புது வஸ்திரம் எல்லாம் கொடுக்கணும். சாட்சாத் லலிதையாவே வரிச்சு, குழந்தை உட்கார்ந்திருக்குமானால், ஸஹஸ்ரநாமமே பண்ணலாம். இல்லேனா திரிசதி, அஷ்டோத்திரம், திருப்தியா போஜனம்- பக்கத்திலே இருந்து அன்பா பரிமாறணும். யதா சௌகரியம் போல் இதைச் செய்துண்டு வந்தால் அம்பாள் அனுகிரஹத்தில் சக்தி பெருகும்.

கிரகத்துக்கு வர சுமங்கலிகளிலே வேணும்கறவா, உறவுக்காரா என்றெல்லாம் பார்க்காம சர்வ தாம்பூலம் கொடுக்கற சிந்தனை வரணும். அப்போதுதான் கிருஹத்திலே சுபிட்சம் பொங்கும். நவராத்திரிலே சுமங்கலிகள் எல்லாருமே ஸூவாஸினிகள்தான்.

“குரவ காக்யஸ்யதரோ புஷ்போத்பத்யர்த்தம்
ஸ்த்ரீ-ஸ்தான-லிங்கன-ரூப-தோஹத-குதூகலஸ்யா
சேதனஸ்ய வ்ருஷ-விசேஷஸ்யாபி அஸூலபா”.

மரத்துக்கு உயிரிலேன்னு பலபேர் நினைப்பா. ஸ்த்ரீகள் தொட்டு பறிச்சா சில செடி, கொடிகள் அதிகமாப் பூக்குமாம். காய்க்குமாம். அதிலே ஒண்ணு மருதாணி. அதுக்கு சம்ஸ்க்ருதத்தில் குரவகம்னு பேரு. அசோக மரத்துக்கு கங்கேலி, காமகேலின்னு பேரு. அதோட பூ சிவப்பா இருக்கும். பூக்காம இருந்தா உத்தம ஸ்திரீகளை அதைத் தொடச் சொல்வா. மரம் கொள்ளாம பூத்துடும்.

‘பாதாஹத: ப்ரம தயாவிக ஸத்ய சோக’ ங்கறது பெரியவா வாக்கு.

தேவி நந்தவனத்தில் உலாவரும்…

View original post 51 more words

sathvishayam

ராம் ராம்
சாந்த்ரமான ரீதியில் பௌஷ க்ருஷ்ணபக்‌ஷ ஏகாதஶீ திதிக்கு ( 12/01/2018)
“ஸபலா” என்ற பெயராகும்.
இந்த வ்ரதத்தின் மாஹாத்ம்யம் மற்றும் கதையை பார்ப்போம்.
पौषस्य कृष्णपक्षे या सफला नाम‌ नामतः।
नारायणोधिदेवोस्याः पूजयेत्तं प्रयत्नतः।।
पूर्वेण विधिना राजन् कर्तव्यैकादशी जनैः।
नागानां च यथा शेषः पक्षिणां‌ गरुडो यथा।।
यथाश्वमेधो यज्ञानां नदीनां जाह्नवी यथा।
व्रतानां‌ च तथा राजन् प्रव्रैकादशी तिथिः ।।
இந்த புஷ்ய கிருஷ்ண பக்‌ஷ ஏகாதஶீ ஆனது, ஸபலா என்ற பெயர் கொண்டதாகும்..இதில் பூஜிக்கதக்க தெய்வமானவர் நாராயணனாவார்.
விதி விதாயகத்துடன் இந்த வ்ரதத்தை ஜனங்களால் அனுஷ்டிக்கப்பட வேணும்.
நாகங்களில் ஆதிஶேஷன் எப்படியோ!
பக்ஷிகளில் கருடன் எப்படியோ!
யாகங்களில் அஶ்வமேதம் எப்படியோ!
நதிகளில் கங்கை எப்படியோ!
அப்படி தான் இந்த ஏகாதஶீ மிகவும் உயர்ந்ததாகும்..
இந்த ஸபலையில் நிறைய பழங்களைக்கொண்டு பூஜிக்க வேண்டும்..
ஶுத்தமான தேங்காய்,
கொய்யாப்பழம்,
எலுமிச்சை,
மாதுளை
பாக்கு,
லவங்கம்
மாம்பழம்
முதலிய பழங்களை கொண்டு அந்த தேவதேவனான‌ நாரயணனை‌ தூபம்‌, தீபம்,போன்ற உபசாரங்களுடன் பூஜித்தல் வேண்டும்.
இந்த ஏகாதஶீயில் தீபம் ஏற்றி பூஜித்தல் மிக உயர்ந்ததாகும்.
ராத்ரி கண் விழித்து ஓர் மனதுடன் எவன் ஒருவன் வ்ரதத்தை அனுஷ்டிப்பானாகில் அதன் பலமானது,
வேறு எந்த யாகத்தாலோ தீர்த்தயாத்ரையினாலோ கிடைக்க கூடியதாகாது..

पञ्चवर्षसहस्राणि तपस्तप्त्वा च यत्फलम् ।
तत्फलं समवाप्नोति सफलाया व्रतेन तु।।
ஐந்தாயிரம்…

View original post 272 more words

sathvishayam

Courtesy:Sri.J.K.Sivan

மஹா பெரியவா வாக்கு – J.K. SIVAN ”

மகா பெரியவாளை மனதால் த்யானித்தேன்.

”என்ன ஏதோ தயங்கி தயங்கி மென்னு முழுங்கறே. சொல்லு?”

”இல்லே பெரியவா உங்களை சிலது கேக்கணும்”

”எனக்கு தெரிஞ்சதெல்லாம் நிறைய சொல்லிிருக்கேனே.”

”அதுலே சிலதை தான் உங்க கிட்டே கேக்கணும்னு ஒரு அபிலாஷை.

”எனக்கு தெரியும் டா. உன்னைப்பத்தி. நீ எதையும் உனக்குன்னு கேக்கறவன் இல்லே. எல்லோருக்கும் கொடுக்க தான் கேப்பே” இல்லையா?”

”ஆமாம் பெரியவா, உங்க ஆசிர்வாதம் அதை நான் நிறைய பண்ணனும்னு தான் எப்பவும் உங்களை வேண்டிக்கறேன் ”

”சரி கேளு”

”எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். நீங்க கிருஷ்ணனை பத்தி நிறைய சொல்லியி ருக்கேள். கிருஷ்ணன் சொன்ன கீதையை பத்தி சில வார்த்தைகள் சொல்லுங்கோ”

பெரியவா: ” கிருஷ்ணன் சொன்னது ஆத்மா பத்தி தான் அதிகம். ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அதையெல்லாம் கடந்திருக்கிறது என்றால், அதெப்படின்னு குழப்பமாயிருக்கா?. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இந்த குழப்பத்தை தீர்த்து தெள்ளத் தெளிவாகப் பண்ணியிருக்கார்:

‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால் அவைதான் இவருக்கு…

View original post 542 more words

Tag Cloud