This WordPress.com site is the bee's knees

மனம்

CHAMARTHI SRINIVAS SHARMA

வினா – மனம் இருப்பதால்தான் நாம் மனிதர்கள் என்று சொன்னீர்கள். ஆனால், யோகிகள் மனமிறக்க வேண்டும், மனம் அழிய வேண்டும், மனதை நாசம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்களே ?

இராம் மனோகர் . மனம் பற்றிய கேள்வி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நவீன விஞ்ஞானம் இதை மூளையோடு தொடர்புபடுத்தி விடா முயற்சியுடன் ஆராய்ந்து மனதின் எண்ணற்ற அற்புத ஆற்றல்களை கண்டு வியந்து நிற்கிறது. நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். நம் எண்ணங்களின் தொகுப்பே மனம். எண்ணங்களே இல்லை என்றால் மனம் இல்லை. சூக்குமமான இந்த மனமானது எதை நினக்கிறதோ அதன் வடிவத்தை எடுக்கும் வல்லமை பெற்றது. நினைத்த மாத்திரத்தில் பல்லாயிரம் மைல்களைக் கடந்து சொல்லும் வல்லமை பெற்றது. மனோ வேகத்தை கணக்கிட்டு சொல்லி விட முடியாது. நான் என்கிற மூல மலத்திலிருந்துதான் மனம் பிறக்கின்றது. அது சித்தம் என்கிற நிலையில் இருந்து எண்ணங்களை பிறப்பிக்கின்றது. அந்த எண்ணங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் புத்தியாகின்றது. இப்படி அஹங்காரமாகி, சித்தமாகி, புத்தியாகி, பலவகையான எண்ணங்களாகி நிற்கும் எண்ண அலைகளின் தொகுப்பே மனம் எனப்படுகிறது.

இந்த மனதை சூக்கும சரீரம் என்பார்கள். அதாவது நமது சரீரமானது ஸ்தூலம், சூக்குமம், காரணம் என்று மூன்று வகைப்படும். ”ஸீர்யதே ஸரீர” என்ற வாக்குப்படி ஜீரணித்துப் போவதால் இது சரீரம் எனப்படுகிறது. ”தஹ்யதே தேஹ” என்ற வாக்குப் படி தகிக்கப்படுவதால் இதை தேஹம்…

View original post 333 more words

Leave a comment

Tag Cloud